சம்பள பாக்கி .. மாதவன் புகார்

கவுரவ் சர்மா தயாரிப்பில் மாதவன், சதா, ஷமிதா ஷெட்டி நடித்துள்ள படம் அவன் அவள் அது. இப்படத்தை கோனா வெங்கட் என்பவர் இயக்கியுள்ளார். இதில் நடித்ததற்காக சம்பளத்தில் ரூ.75 லட்சம் பாக்கி வைத்திருப்பதாகக் கூறி தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார் மாதவன்.
இதுகுறித்து மாதவனின் மானேஜர் நஸீர் கூறியிருப்பதாவது:
அவன் அவள் அது படத்தில் ஒரு இடைவெளிக்குப் பிறகு நடித்தார் மாதவன். ஆனால் படத்தின் 10 நாள் ஷூட்டிங் பாக்கி இருந்த நிலையில் தயாரிப்பாளர் கவுரவ் சர்மாவுக்கு பண நெருக்கடி வந்தது.
இதனால் படக்குழுவிடம்கூட சொல்லாமல் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டுச் சென்று விட்டார் தயாரிப்பாளர். அவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தோம். மீதி காட்சிகளை படமாக்க பணம் இல்லாததால் படத்தை நிறுத்திவிட்டோம்.
இப்போது சென்னைக்கு வந்துள்ள கவுரவ் சர்மா யாரிடமும் சொல்லாமல் எடிட்டிங் பணிகளை ஆரம்பித்திருக்கிறார். மாதவனுக்கு ரூ.75 லட்சம் சம்பளம் பாக்கி மற்றும் பத்து நாள் ஷூட்டிங் இருக்கும்போதே, படத்தை எடிட் செய்திருக்கிறார்.
இதே படத்தை தெலுங்கிலும் டப்பிங் செய்துள்ளார். அதற்காக அங்கு பாடல் கேசட் வெளியீட்டு விழா நடத்த முயன்றார். கோனா வெங்கட், அங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதால் பாடல் கேசட் விழாவுக்கு தடை விதித்து விட்டனர்.
இப்போது தமிழில் பாடல் கேசட் விழாவை நடத்த முயன்று வருகிறார். மும்பையில் இந்திப் பட சூட்டிங்கில் உள்ள மாதவன், இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரிடம் புகார் கொடுத்துள்ளார். தயாரிப்பாளர் கவுன்சலிலும் புகார் அளித்துள்ளார்.
லீலை என்ற படம்தான் பாதியில் நிறுத்தப்பட்டு மீண்டும் அவன் அவள் அது, என்று பெயர் மாறி உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா. இப்போது படத்தை அப்படியே கவுரவ் சர்மாவுக்கு கைமாற்றி விட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











