ஆட்லேப்ஸின் 4 படங்களில் மாதவன்

அதனால்தான் அலைபாயுதேயில் கிடைத்த சாக்லெட் ஹீரோ இமேஜை உடைத்துவிட்டு தம்பி, எவனோ ஒருவன் போன்ற வித்தியாசமான படங்களைக் கொடுத்தார். தொடர்ந்து இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். விரைவில் நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கும் திட்டமும் உள்ளதாம்.
மின்னலே படத்தின் இந்திப் பதிப்பு, மணிரத்னத்தின் குரு படங்களில் நடித்த மாதவன், இப்போது 13பி எனும் இந்திப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரிலையன்ஸ் குழுமத்தின் அட்லாப்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது.
மாதவனுடன் நீது சந்திரா ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்துவருகின்றன. படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது. தமிழில் மாதவனுக்கு ரசிகைகள் அதிகம் இருப்பதால் தமிழிலும் இப்படத்தை டப் செய்கிறார்கள். ஆனால் வேறு தலைப்பில். ஏற்கெனவே ஷாம் நடித்து 12பி எனும் படம் தமிழில் வெளியாகியுள்ளது நினைவிருக்கலாம்.
இதுகுறித்து அட்லாப்ஸ் முதன்மை மார்க்கெட்டிங் அதிகாரி சவுரப் வர்மா கூறுகையில், மாதவனின் 13பி படம் சிறப்பாக வந்துள்ளது. விரைவில் திரைக்கு வந்துவிடும். இதைத் தொடர்ந்து மேலும் 4 படங்களில் மாதவனை ஒப்பந்தம் செய்துள்ளோம். வரும் ஆண்டில் அடுத்தடுத்து இந்தப் படங்கள் தயாரிக்கப்படும். அவரது உழைப்பு, வியாபார நுணுக்கம், ஒரு படத்தை அணுகும் முறை போன்றவை எங்களை மிகவும் கவர்ந்துவிட்டன. இத்தனை திறமைகளையும் உள்ளடக்கிய ஒரு ஹீரோவை எந்த நிறுவனம்தான் விட்டு வைக்கும்... என்றார்.
அட்லாப்ஸ் நிறுவனத்துக்கு மார்க்கெட்டிங் குறித்து முழுமையான தெளிவு உள்ளது. என்னை தொடர்ந்து ஒப்பந்தம் செய்வதற்கு அதுவும் ஒரு காரணம் என்கிறார் மாதவன்.
படம் வரட்டும் பார்க்கலாம்...


Click it and Unblock the Notifications











