சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மலையாள நடிகர், நடிகைகள் சம்மதம்

இதுதொடர்பாக மலையாள நடிகர் சங்கமான அம்மாவுக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நடந்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது. இருப்பினும், எவ்வளவு சம்பளத்தைக் குறைப்பது என்பது இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை.
இக்கூட்டத்தில், நடிகர் சங்கம் சார்பில் அம்மா தலைவர் இன்னொசன்ட், மம்முட்டி, மோகன்லால், திலீப், முகேஷ், ஜெகதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சபு செரியன், செயலாளர் சுரேஷ் குமார் கூறுகையில், ஒரு சூப்பர் ஸ்டாரின் படத்துக்கான பட்ஜெட் ரூ. 3.5 கோடிக்கு மேல் போகக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த பட்ஜெட் ரூ. 5 கோடியாக உள்ளது.
மேலும், படப்பிடிப்புத் தொடங்குவதற்கு 45 நாட்களுக்கு முன்பே படத்தின் ஸ்கிரிப்ட்டை இயக்குநரும், தயாரிப்பாளரும் சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் கொடுத்து விட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











