'கோக்'- கொடி பிடிக்கும் அமீர்கான்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், கோக்கில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பதாக கூறப்படுவது குறித்தும், அதற்கு பிராண்ட் அம்பாசடராக இருக்கிறீர்களே என்றும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அமீர் பதிலளிக்கையில், இந்தியாவில் நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பண்டங்களில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருக்கத்தான் செய்கிறது.
கோக்கை விட பால், தண்ணீர், முட்டை, ஏன் பல காய்கறிகளிலும் கூட நிறைய பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருக்கிறது.
நான் கோக்கை விளம்பரப்படுத்துவதால் குழந்தைகள் அதிகம் வாங்கி குடிப்பார்கள் என்று கூறுவதை ஏற்க மாட்டேன். எனக்கு கோக்கைப் பிடிக்கும். எனவே அதை விளம்பரப்படுத்துகிறேன். எனது இளம் வயதிலிருந்தே நான் கோக்கை விரும்பி அருந்துகிறேன் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications