பா விஜய் நடிக்கும் பிரபா!

இந்தப் படம் குறித்து அவர் கூறுகையில், "ஞாபகங்கள் சரியாகப் போகவில்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் நடிகனாக வேண்டும் என்று நினைத்தபோதே எழுதிய கதை 'பிரபா'.
முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை. முதல் படமாக இந்தக் கதையைச் செய்தால் விமர்சனங்கள் வருமே என்று நினைத்து ஞாபகங்கள் படம் செய்தேன்.
ஆனால் வணிக ரீதியாக சில விஷயங்களை அந்தப் படத்தில் சரியாக சேர்க்க முடியாததால் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதன்பிறகுதான் அறிமுக நடிகனுக்கு இமேஜ் தேவையில்லை எனப் புரிந்துகொண்டேன். 'பிரபா' படத்தில் ஒரு முழு நீள அதிரடிப் படம். ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறேன். ஏராளமான புதுமுகங்களை அறிமுகப்படுத்துகிறேன்..." என்றார் பா.விஜய்.
Comments


Click it and Unblock the Notifications