மோகன்பாபு வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய ரஜினி!
இந்த ஆண்டு தனது பிறந்த நாளை தனது நெருங்கிய நண்பரும் நடிகருமான மோகன்பாபுவுடன் கொண்டாடினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
பிறந்த நாளில் ரஜினி எங்கே இருந்தார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் கேட்டு வந்தனர். இப்போது அதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேற்று தனது மிக நெருங்கிய நண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன் பாபு வீட்டில் இருந்தார் ரஜினி.
இதுகுறித்து மோகன்பாபு தனது ட்விட்டரில் இப்படி குறிப்பிட்டுள்ளார்:
ரஜினியின் விசேஷ பிறந்தநாளை (சஷ்டியப்தபூர்தி) அன்று அவருடன் கொண்டாடியது மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் பல சிறப்புகள் அவரைச் சேர வாழ்த்துகிறேன்!"
ரஜினிக்கு வாழ்த்துச் சொன்ன விஜயகாந்த்!
ரஜினிக்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவர் கூறுகையில், "அண்ணன் ரஜினிகாந்த்துக்கு எனது மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல்லாண்டு நீடித்த புகழோடு அவர் வாழவேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











