நான் ரஜினியின் ரசிகன்தான்... ஆனால் ரஜினியாக நடிக்கவில்லை! - சல்மான்

By Shankar

நான் ரஜினியின் ரசிகன்தான். ஆனால் அவரது வேடத்தில் நடிக்கவில்லை. அதை ரசிகர்கள் விரும்புவார்களா என்ற கேள்வி உள்ளதால் நடிக்கவில்லை, என்றார் சல்மான்கான்.

ரஜினியின் வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஒன்றை சல்மான்கானின் மைத்துனரும் பிரபல தயாரிப்பாளருமான அதுல் அக்னிஹோத்ரி தயாரிப்பதாகவும், அதில் ரஜினிகாந்தாக சல்மான் நடிப்பார் என்றும் செய்தி வெளியானது. இதனை அதுல் அக்னிஹோத்ரியும் ஒரு பிரஸ்மீட்டில் அறிவித்தார்.

ஆனால் இதற்கு ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களே எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி ஒரு சகாப்தம். அவரைப் போல வேறு யார் நடித்தாலும் ஏற்க முடியாது என்று தெரிவித்திருந்தனர்.

இன்னொரு பக்கம், ரஜினியின் குடும்பத்தினர் இந்தப் படத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறிவிட்டனர். "இப்படியொரு படம் எடுப்பதை நாங்கள் யாரும் விரும்பவில்லை. இது குறித்து எங்களிடம் இதுவரை யாரும் பேசவுமில்லை," என்று ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முக நரம்பு அறுவைச் சிகிச்சை முடிந்து லண்டன் வந்த சல்மான்கான் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் ரஜினி வாழ்க்கை வரலாறு படம் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சல்மான், "ரஜினியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நான் நடிக்கவில்லை. ரசிகர்கள் அதை எந்த அளவுக்கு ஏற்பார்கள் என்பதில் சந்தேகம் உள்ளது. தேவையில்லாமல் அவர்களின் எதிர்ப்புக்கு ஆளாக விரும்பவில்லை. மற்றபடி நான் ரஜினியின் தீவிர ரசிகன். நானே ரஜினியாக மாற வேண்டும் என ஆசைப்படவில்லை... இந்திய சினிமாவில் ஒரு ரஜினிதான்... ஒரு சல்மான்தான்!," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X