‘கிக்’ மூலம் ‘க்ளிக்’கான ஷாம்!

தொடர்ந்து, 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே' போன்ற படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த ஷாம், இப்போது அந்தோணி யார், அகம் புறம், சரியா தவறா மற்றும் இந்தியிலும், தெலுங்கிலும் தலா ஒன்று என ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே அவர் 'கிக்" என்ற தெலுங்குப் படத்தில் ரவி தேஜா மற்றும் இலியானாவுடன் இணைந்து நடித்தார்.
சுரேந்தர் ரெட்டி இயக்கிய இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது. இன்றைய தேதிக்கு தெலுங்கில் வசூல் மற்றும் தரத்தில் முதலிடத்தில் நிற்கிறதாம் இந்தப் படம். குறிப்பாக ஷாமின் ஆக்ஷன் காட்சிகள் பெரிய அளவு பேசப்படுகின்றனவாம் இந்தப்படத்தில்.
இந்தப் படத்துக்காக ஒரு சண்டைக் காட்சியில் ஷாம் நடித்த போது, பெரிய விபத்து நேர்ந்தது அவருக்கு. நடக்கவே முடியாத அளவுக்கு கணுக்காலில் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். ஆனால் அந்தக் காட்சியின் தொடர்ச்சி சரியாக வரவேண்டும் என்பதற்காக வலியையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்தார் ஷாம்.
ஷாமின் அந்த ஒத்துழைப்பு மற்றும் அவரது துடிப்பான நடிப்பால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் சுரேந்தர் ரெட்டி, அப்போதே, 'அடுத்த படம் நாம சேர்ந்து பண்றோம்' என வாக்களித்தார் ஷாமுக்கு.
இப்போது அந்த வாக்கைக் காப்பாற்றியும் உள்ளார். தனது அடுத்த படத்துக்கு ஷாமையே தனி ஹீரோவாக ஒப்பந்தம் செய்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
கிக் படத்தின் இரண்டாவது வார வசூல் தெலுங்கு தயாரிப்பாளர்களை பிரமிக்க வைத்துள்ளதாம். அதன் விளைவு, பெரிய பட நிறுவனமான பத்மாலயாவிலிருந்தும் ஷாமிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆக, தெலுங்கில் முதல் 'கிக்"கிலேயே க்ளிக்காகிவிட்டார் ஷாம்!


Click it and Unblock the Notifications











