தமிழின் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வில்லு-விஜய்

By Staff

Vijay with Nayanatara
தமிழின் முதல் ஜேம்ஸ்பாண்ட் படம் வில்லு, என்று எல்லோரும் சொல்லும் வகையில் சிறப்பாக வந்துள்ளது என்கிறார் விஜய்.

அவர் கூறுகையில்,

"எல்‌லோ‌ரும்‌ படம்‌ நல்‌லா‌ வந்‌தி‌ருக்‌கு... இந்‌தி‌ய அளவு‌ல ஜேம்ஸ்பாண்ட் படம்னா அது வில்லுதான்னு எல்லாரும் சொல்றாங்க. படம்‌ எடுக்‌கும்‌ போ‌து எனக்‌கு அப்‌படி‌ தோ‌ணல. ஆனா‌ல்‌ இப்போ படத்தை பா‌க்‌கும்‌போ‌து அப்‌படி‌ ஒரு பீல் இருந்‌தததை‌ உணர முடி‌ஞ்‌சி‌து.

எதை‌யு‌மே‌ சொ‌ல்‌றது‌ ரொ‌ம்‌ப ஈசி‌. செ‌ஞ்‌சி‌க்‌ கொ‌டுக்‌கி‌றது ரொ‌ம்‌ப கஷ்‌டம்‌. ஆனா‌ல்‌ அப்‌படி‌ இல்‌லா‌மல்‌ கே‌ட்‌டதை‌யெ‌ல்‌லா‌ம்‌ செ‌ஞ்‌சி‌க்‌ கொ‌டுத்‌தா‌ர்‌ தயா‌ரி‌ப்‌பா‌ளர்‌ கருணா‌மூ‌ர்‌த்‌தியு‌ம்‌‌. அருண்‌பா‌ண்‌டி‌யனும்‌. அவு‌ங்‌களுக்‌கு நன்‌றி‌ சொ‌ல்‌லி‌க்‌கி‌றே‌ன்‌. ப்‌ளை‌ட்‌ வே‌ணும்‌னா‌ ப்‌ளை‌ட்‌, ஷி‌ப்‌ வே‌ணும்‌னா‌ ஷி‌‌ப்‌, ஹெ‌லி‌கா‌ப்‌டர்‌ வே‌ணும்‌னா‌ ஹெ‌லி‌கா‌ப்‌டர்‌ என்‌ன கே‌ட்‌டா‌லும்‌ ரொ‌ம்‌ப கி‌ரா‌ண்‌டா‌ பண்‌ணி‌ கொ‌டுத்‌தா‌ங்‌க. எனக்‌கு ரொ‌ம்‌ப பெ‌ருமை‌யா‌ இருக்‌கு இந்‌த படம்‌.

நா‌ன்‌ பி‌ரபு ‌தே‌வா‌வு‌க்‌கு ஒரு பே‌ர்‌ வச்‌சி‌ருக்‌கே‌ன்‌. சூ‌ப்‌பர்‌மே‌ன்‌, ஸ்‌பை‌டர்‌மே‌ன்‌ மா‌தி‌ரி‌ அவர்‌ மே‌ஜி‌க்‌மே‌ன்‌. அந்‌த மே‌ஜி‌க்‌ அவர்‌கி‌ட்‌டே‌ இருக்‌கு. இன்‌னை‌க்‌கு இந்‌த சீ‌ன்‌ எடுக்‌குறா‌ங்‌க. இப்‌படி‌த்‌தா‌ன்‌ எடுப்‌பா‌ங்‌கன்‌னு ஒவ்‌வொ‌ரு நா‌ளும்‌ நி‌னை‌ச்‌சி‌க்‌கி‌ட்‌டு ஸ்‌பா‌ட்‌டுக்‌குப்‌ போ‌வே‌ன்‌. ஆனா‌ல்‌ அது மா‌தி‌ரி‌ அங்‌கே‌ நடக்‌கா‌து. அவர்‌ வே‌ற மா‌தி‌ரி‌ எடுப்‌பா‌ர்‌.‌

உதா‌ரணத்‌துக்‌கு ஒண்‌ணு சொ‌ல்‌லனும்‌னா‌ சுவி‌ட்‌சர்‌லா‌ந்‌துல ஒரு பா‌ட்‌டு சீ‌ன்‌. வழக்‌கமா‌ அங்‌கே‌ போ‌ய்‌ என்‌ன எடுப்‌போ‌ம்‌. ரோ‌ட்‌டு ஓரத்‌துல ஆடுவோ‌ம்‌. நடப்‌போ‌ம்‌. கதா‌நா‌யகி‌யை‌ கட்‌டி‌ப்‌ பி‌டி‌ப்‌போ‌ம்‌, முத்‌தம்‌ கொ‌டுப்‌போ‌ம்‌. ஆனா‌ல்‌ இவரு அங்‌கே‌ போ‌னதும்‌ சொ‌ல்‌றா‌ரு... நீ‌ங்‌க ஆடுறீ‌ங்‌க. உங்‌க பி‌ன்‌னா‌ல ரெ‌ண்‌டு பா‌ய்‌ஸ்‌ ஆடுறா‌ங்‌க. அந்‌த ரெ‌ண்‌டு பா‌ய்‌ஸு‌ம்‌‌ நீ‌ங்‌கதா‌ன்‌.

உண்‌மை‌யி‌லயே‌ இந்‌தப்‌படத்‌துல நடி‌க்‌கி‌றதை‌ வி‌ட அந்‌த பா‌ட்டு‌ல ஆடுனது ரொ‌ம்‌ப கஷ்‌டம்‌. அடி‌க்‌கடி‌ டி‌ரஸ்‌ மா‌த்‌தி‌க்‌கி‌ட்‌டு ரொ‌ம்‌ப கஷ்‌டப்‌பட்‌டு எடுத்‌தோ‌ம்‌.

இந்தப்ப படம் என்னோட 48வது படம். எல்லோரும் என்னோட 50 வது படம்னு ஒரு பில்ட் கொடுத்து எழுதிக்கிட்டு வற்றாங்க. எனக்கு அதுல நம்பிக்கை இல்லை. ஆனாலும், என்னோட 50வது படமா வில்லு இருந்திருக்கக் கூடாதான்னு ஆசைப்படறேன்.

ஏன்னா... அப்படி தனியா குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு சிறப்பான பல விஷயங்கள் இந்தப் படத்துல அமைஞ்சிருக்கு," என்றார் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X