twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒரு மாதம் பொறுங்க, நானே வந்து பார்க்கிறேன்! - விவிஐபிகளுக்கு ரஜினி பதில்

    By Shankar
    |

    Rajinikanth
    சிங்கப்பூரிலிருந்து ரஜினி சென்னை திரும்பி இன்றோடு 1 மாதம் ஆகிறது. இதுவரை வீட்டிலிருந்து வெளியே வரவில்லை அவர்.

    இந்த ஒரு மாத காலத்தில் அவரைப் பார்க்க நெருங்கிய உறவினர்கள் கூட போயஸ் கார்டன் வரவில்லை. அவர்கள் வர ஆரம்பித்தால் தொடர்ந்து பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் வரத் தொடங்கிவிடுவார்கள். இது ரஜினி உடலிநிலையில் மீண்டும் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்திவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான் காரணமாம்.

    அதற்கேற்ப, ரஜினியைப் பார்க்க ஏராளமான விவிஐபிக்கள் ஆர்வம் காட்டி, தினமும் அவருக்கு போன் செய்து வருகிறார்களாம். டெல்லித் தலைவர்கள், சென்னை பிரமுகர்கள் நேரில் வந்து பார்க்கலாமா என்று அன்புடன் கேட்க, ரஜினியோ என்ன சொல்வதென்று தெரியாமல் தவிக்கிறாராம்.

    ஒருவருக்கு ஓகே சொல்லி, அடுத்தவரை சங்கடத்தில் ஆழ்த்த விரும்பாத ரஜினி, அனைவருக்குமே சொல்லும் பதில், "ஒரு மாதம் பொறுங்க, நானே அனைவரையும் வந்து சந்திக்கிறேன்," என்பதுதான்.

    பேசும் வாய்ப்பாவது கிடைத்ததே என்ற திருப்தியில், பார்க்கும் ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்களாம் ரஜினி அன்பர்கள்!

    English summary
    Various political leaders and film personalities contacted superstar Rajini to get his appointment. But the actor replied them that he would meet them soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X