»   »  46வது பிறந்தநாள் கொண்டாடும் ஆமிர் கான்: ரசிகர்கள் வாழ்த்து

46வது பிறந்தநாள் கொண்டாடும் ஆமிர் கான்: ரசிகர்கள் வாழ்த்து

By Siva
Subscribe to Oneindia Tamil
Aamir Khan
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கான் இன்று தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

'ஏ மேரே ஹம்சஃபர்' என்று நேற்றுதான் ஆமிர்கான் பாடியது போல இருக்கிறது. ஆனால் 30 ஆண்டுகள் ஓடி விட்டது பாலிவுட்டில் ஆமிர்கான் அறிமுகமாகி. யாதோன் கி பாரத் படம்தான் ஆமிர்கானின் முதல் படம். அதில் குட்டிப் பையனாக நடித்திருப்பார் ஆமிர்.

அவர் ஹீரோவாக அறிமுகமான படம் ஹோலி. ஆனால் லைம் லைட்டுக்கு போய், சூப்பர் ஸ்டாராக அவரை அடையாளம் காட்டிய படம் கயாமத் சே கயாமத் தக். அன்று தொடங்கிய அவரது பாலிவுட் ஆட்டம், ஒவ்வொரு படத்திலும் ஆமிர்கானுக்கு தனி முத்திரையைப் பதித்து தனித்துவம் வாய்ந்த நாயகனாக அவரை மாற்றியிருக்கிறது.

தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கெட்டப் மட்டுமின்றி சமுதாயத்திற்கு தேவையான கருத்தையும் மக்களுக்கு பிடித்தபடி கொடுக்கும் நடிகர் அவர்.

ஆமிர் நடிக்கும் ஸ்டைலை மட்டுமல்லாமல், படம் எடுக்கும் ஸ்டைலையும் பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டும் பாராட்டுகின்றது. ஆஸ்கர் விருதுக்கு அவரது லகான், தாரே ஜமீன் பர் ஆகிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

'அரைச்ச மாவை அரைப்போமா' என்று மற்றவர்கள் பாடிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், லகான், ரங் தே பசந்தி, தாரே ஜமீன் பர், தோபி காட் போன்ற வித்தியாசமான படங்களைத் தந்துள்ளார் ஆமிர்.

அவருக்கு நாளுக்கு நாள் வயதாகிக் கொண்டு போனாலும், நடிப்பிலும், இயக்கத்திலும், இளமை கூடிக் கொண்டே போகிறது என்பதில் சந்தேகமில்லை.

ஹேப்பி பர்த்டே ஆமிர்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Bollywood superstar Aamir Khan is celebrating his 46th birthday today. He is known for his uniqueness and perfection. His films has made Hollywood to turn towards Bollywood. Though he is growing older, he stills looks younger. Happy birthday Aamir.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more