ரசிகர்களுடன் நடந்த சந்திப்பின் மயங்கிவிழுந்தார் நமீதா!

By Sudha

Namitha
காய்ச்சல், தலைவலி என தங்கள் உடல்ரீதியான பிரச்சினைகளையும் சில சமயம் நடிகர் நடிகைகள் தாங்கித்தான் தீர வேண்டியுள்ளது, கொடுத்த கமிட்மெண்டுக்காக, அல்லது வாங்கிய பணத்துக்காக.

சமீபத்திய உதாரணம் நடிகை நமீதா.

நமீதாவுடன், அவருடைய ரசிகர்கள் சந்தித்து உரையாடுவது போன்ற ஒரு நிகழ்ச்சிக்கு, ஒரு செல்போன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சி, சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

நமீதா, கடந்த சில நாட்களாக மலேரியா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். ரசிகர்களை சந்தித்து உரையாடுகிற நிகழ்ச்சி என்பதால், காய்ச்சலை பொருட்படுத்தாமல், அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்.

நமீதாவை சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதே என்று தமிழ்நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு திரண்டு வந்தார்கள். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நமீதா பேசமுடியாமல் தடுமாறி, மயங்கி விழுந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ரசிகர்களை கலைந்து போக வைத்தனர். பின்னர் மயக்கம் தெளிந்த நமீதாவை, சென்னை அடையாறில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார்கள். நமீதா உடல்நிலையை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பதை கண்டுபிடித்தனர்.

நமீதாவுக்கு சிகிச்சை அளித்து, அவரை ஓய்வு எடுத்துக்கொள்ளும்படி டாக்டர்கள் கேட்டுக்கொண்டார்கள்.

நமீதாவின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் புனே அருகில் உள்ள ஆம்பிவேலி மலைவாசஸ்தலத்தில் வசிக்கிறார்கள். காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் நமீதாவை இங்கே கவனிப்பதற்கு யாரும் இல்லாததால், நமீதா விமானம் மூலம் மும்பை சென்று, அங்கிருந்து காரில் அம்பிவேலிக்கு சென்றார்.

அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நமீதா, 'மச்சான்ஸை' எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், முதலில் உடம்பைப் பார்த்துக்குங்க...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X