பாலிவுட் கிங் அமிதாப்தான்!-அக்ஷய்

By Staff

Akshay Kumar with Twinkle
பராலிவுட்டைப் பொறுத்தவரை நாங்கள் எத்தனை ஹிட்கள் கொடுத்தாலும், எங்களுக்கு கிங் அமிதாப்தான், என்கிறார் அக்ஷய் குமார்.

கான்களும், பச்சன்களும் மட்டுமே சூப்பர் ஸ்டார்களாகக் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் பாலிவுட்டில், இப்போது புதிய சூப்பர் ஸ்டாராக அவதாரமெடுத்துள்ளார் அக்ஷய் குமார்.

அவரும் கத்ரீனா கைஃபும் இணைந்து நடித்துள்ள சிங் இஸ் கிங் திரைப்படம் மிரகப் பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது.

ஷாரூக்கானின் ஓம் சாந்தி ஓமுக்குப் பிறகு அதற்கு நிகரான கலக்கல் வசூலுடன் இப்போது ஓடிக்கொண்டிருப்பது அக்ஷய் குமாரின் இந்தப்படம்தான்.

முதல் ஒரு வார முடிவில், உலகமெங்கும் அட்வான்ஸ் புக்கிங் உள்பட இப்படத்துக்கு வந்த மொத்த கலெக்ஷன் ரூ.56 கோடி!

இந்த இரண்டாவது வாரமும் படம் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு வெளியான ஷாரூக்கானின் ஓம் சாந்தி ஓமுக்கு நிகரான வசூலை இந்தப் பெற்றிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அக்ஷய்யிடம் கேட்ட போது, படம் நன்றாகப் போகிறது. ஆனால் இரண்டாவது வார நிலவரம்தான் படத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும். ஆனால் ஓம் சாந்தி ஓம் வசூலுடன் இந்தப் படத்தை ஒப்பிட வேண்டாம். பொதுவாகவே இப்படிப்பட்ட ஒப்பீடுகள் கசப்பில்தான் முடியும். அது மிகப் பெரிய வெற்றிப் படம். என் படத்தின் வெற்றி இனிமேல்தான் தெரியும்.

என்னை பாலிவுட் கிங் என்று தயவுசெய்து கூப்பிடாதீர்கள். இன்றைய தேதிக்கு இந்தியாவின் கிங் என்ற பெருமை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அபிநவ்வுக்குத்தான் சேரும். பாலிவுட்டைப் பொறுத்தவரை, நாங்கள் எத்தனை வெற்றிகளைக் கொடுத்தாலும் அமிதாப் பச்சன்தான் கிங். நாங்கள் அவரது ரசிகதர்கள்தான், என்றார் அக்ஷய்.

வெற்றி குவியக் குவிய அநியாயத்துக்கு அடக்கம் வந்துவிடுகிறது... நல்லதுதான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X