நயன்தாராவை கட்டாயப்படுத்தினேனா?-தனுஷ்

ரஜினியின் வெற்றிப் படமான மாப்பிள்ளை படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் தனுஷ்.
கதாநாயகியாக தெலுங்கு கவர்ச்சி நாயகி ஹன்சிகா மோத்வானி அறிமுகமாகிறார்.இந்த படத்தில் நயன்தாரா சில காட்சிகளில் நடிக்கப்போகிறார் என்றும், ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுகிறார் என்றும் செய்திகள் வந்தன.
தனுஷின் மாமனார் நடித்த சிவாஜியில் ஒற்றைப் பாடலுக்கு ஆடியவர், இப்போது ரஜினி மாப்பிள்ளை நடிக்கும் படத்திலும் ஆடப்போகிறார் என்று எழுதப்பட்டிருந்தது.
ஆனால் இந்தச் செய்திகளை மறுத்துள்ளார் தனுஷ்.
"இது முற்றிலும் வதந்திதான். எப்படி கிளம்பியது என்று எனக்கு தெரியவில்லை. மாப்பிள்ளையில் நயன்தாராவை நடிக்க வைப்பது பற்றி சிந்திக்கவே இல்லை. ஒரு பாட்டுக்கு மட்டும் நடனம் ஆடும்படியும் கூறவில்லை" என்றார்.
இந்தச் செய்திகளை தற்போது நயன்தாராவும் மறுத்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications