தபாங் ரீமேக்கில் இணையும் தரணி - சிம்பு
தில், தூள், கில்லி என சொல்லிச் சொல்லி ஹிட் கொடுத்த இயக்குநர் தரணி என்ன செய்கிறார் இப்போது?
தெலுங்கில் பங்காரம், தமிழில் குருவி என இரண்டு பிளாப்களுக்குப் பிறகு, மீண்டும் தன்னை நிரூபிக்க ரூ 45 கோடியில் ஒரு படத்தைத் துவங்கினார். ஹீரோ: சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா. ஆனால் பிரமாண்ட துவக்க விழா, அடுத்து ஒரு ஷெட்யூல் ஷூட்டிங்குடன் நின்றுவிட்டது அந்தப் படம்.
இதில் பயங்கர அப்செட்டான தரணிக்கு, இப்போது கைகொடுக்க முன் வந்துள்ளவர் சிம்பு.
இந்தியில் பெரும் வெற்றி பெற்ற படம் தபாங். சல்மான் கான் - சோனாக்ஷி நடித்தது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு.
ஆரம்பத்தில் சரவணன் என்பவரை இயக்குநராக ஒப்பந்தம் செய்திருந்த சிம்பு, இப்போது அந்தப் படத்தை தரணி இயக்கினால் நன்றாக இருக்கும் என விரும்ப, கிடைத்த நல்ல வாய்ப்பை பிடித்துக் கொண்டுள்ளார் தரணி.
குருவியாக சுருங்கிப் போகாமல், கில்லியாக ஜெயிப்பாரா தரணி..!


Click it and Unblock the Notifications











