ஹாலிவுட்டுடன் ஒப்பிடாதீர்கள் - கமல்

சென்னையில் இன்று ஒரு புதிய படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா நடந்தது.
சத்யம் திரையரங்கில் நடந்த இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கமல்ஹாஸன் பேசுகையில், தமிழ் கலைஞர்களை பிற மொழியினருடன் ஒப்பிட்டுப் பேசுவதைக் கண்டித்தார்.
மேலும் பேசுகையில், "வியாபாரத்துக்காக யாரும் சினிமாவுக்கு வரக்கூடாது. கனவு இருந்தால் மட்டுமே வர வேண்டும். பொருள் ஈட்டுவதற்கு வேறு நிறைய வழிகள் இருக்கிறது.
துப்பாக்கியை காட்டி வைரமுத்துவிடம் கவிதை கேட்க முடியாது. சினிமா தொழில் சொந்த வீடு கட்டுவது மாதிரி. சட்டி, பானை செய்வது போன்று அல்ல.
ஆங்கில படத்துக்கு இணையாக இப்படம் உள்ளது என்று இங்கு பேசினார்கள். அப்படி ஒப்பிட்டு பேசாதீர்கள். கலைஞரையும், புஷ்சையும் ஒப்பிடலாமா? வைரமுத்துவை ஷெல்லியுடன் ஒப்பிட்டு பேசலாமா? வைரமுத்து என்றாலே புரியும். ஆங்கில நடிகர்களுடன் தமிழ் நடிகர்களை ஒப்பிடுகிறீர்களே? அப்படியென்றால் நாங்கள் எல்லாம் காலி பசங்களா?
உலகம் உருண்டு பகல்-இரவு ஆவதுபோல் அவர்கள் நிலைமை உள்ளது. மீண்டும் மாறுதல் வரும். அதற்கு தயாராக இருக்கிறோம்...." என்றார் கமல்.


Click it and Unblock the Notifications











