சென்னையில் எந்திரன் ஷூட்டிங்!

ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்கும் மகா பிரமாண்டப் படம் எந்திரன்.
இப்படத்தின் இரு பாடல் காட்சிகளை அமெரிக்கா, மச்சுபிச்சு உள்ளிட்ட இடங்களில் படமாக்கினார் ஷங்கர். இதையடுத்து கோவாவுக்கு படப்பிடிப்பு இடம் பெயர்ந்தது.
அடுத்து குலுமனாலியில் படப்பிடிப்பை நடத்த ஷங்கர் திட்டமிட்டிருந்தார். ஆனால் மணிரத்தினத்தின் அசோக வனம் படப்பிடிப்புக்காக ஐஸ்வர்யா கேரளா போயிருப்பதால் குலு மனாலியில் படப்பிடிப்பை நடத்த முடியவில்லை.
இதையடுத்து அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது. ஹீரோயின் வராததால் ரஜினி படத்தின் ஷூட்டிங் ஒன்று ரத்து செய்ய்பட்டது இதுவே முதல் முறை என்று தெரிகிறது.
தற்போது சென்னையி்ல் 2 வாரங்களுக்கு ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர். நாளை சென்னை படப்பிடிப்பு தொடங்குகிறது.
படப்பிடிப்பு முழுவதும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











