அஜீத்தின் 50வது படம்-இயக்கம் கெளதம்!

By Staff

Ajit with Shalini and daughter Anushka
அஜீத்தின் 50 வது படத்தை மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி தயாரிக்கிறார். இயக்குவர் கவுதம் மேனன்!

அஜீத்தும் கெளதம் மேனனும் சிவாஜி பிலிம்ஸ் இப்போது தயாரித்துக் கொண்டுள்ள படத்திலேயே இணைவதாக இருந்தது. கதை விவாதம் நடந்து படத்துக்கு சுராங்கனி என்று பெயர் கூட சூட்டிவிட்டார்கள். ஆனால் படம் தொடங்குவதற்குள் இருவருக்கும் சில விஷயங்களில் உடன்பாடு ஏற்படாததால் விலகிவிட்டனர்.

அந்த வாய்ப்புதான் பின்னர் சரணுக்கு தரப்பட்டது.

இப்போது அஜீத்தின் பொன்விழாப் படத்தை இயக்கும் வாய்ப்பு கெளதம் மேனனுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப் படத்தை துரை தயாநிதி தனது கிளெட் நைன் மூவீஸ் மூலம் தயாரிக்கிறார்.

ஏற்கெனவே கெளதம் மேனனின் வாரணம் ஆயிரம் படத்தை வாங்கி வெளியிட்டவர் துரை தயாநிதிதான் என்பது நினைவிருக்கும்.

ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். நாயகி மற்றும் பிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என அஜீத் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படத்துக்கு புதிய தலைப்பு தேடும் வேலையில் மும்முரமாக உள்ளாராம் கெளதம் மேனன். சுராங்கனி தலைப்பு நன்றாக இருந்தாலும், அந்தத் தலைப்பு இப்போதைக்கு பிரச்சினை கிளப்பும் என்பதால் வேண்டாம் என்று கூறிவிட்டாராம் அஜீத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X