தமிழகத்தில் சல்மான் கான் படங்களை வாங்க ஆளில்லை!

By Chakra

தமிழ் அமைப்புகள், உணர்வாளர்களின் எதிர்ப்புகளையும் மீறி இலங்கைக்குப் போனதோடு, ராஜபக்சேவின் ராஜ உபசரிப்பில் விருந்துண்டு, படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட சல்மான் கான் மீது தொடர்ந்து தமிழகத்தில் எதிர்ப்பு உணர்வு நிலவுவதால் அவர் நடித்த படங்களை வாங்க தமிழக விநியோகஸ்தர்கள் மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் நடித்துள்ள 3 படங்களை வாங்க யாரும் முன்வரவில்லையாம்.

ஆசினுடன் இணைந்து ரெடி படத்தில் நடித்துள்ளார் சல்மான் கான். இப்படத்தை சமீபத்தில் இலங்கையில் வைத்து படமாக்கினர். தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் சல்மானும் சரி, அவருக்கு ஜோடியாக நடித்த ஆசினும் சரி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு சென்னைக்குத் திரும்பி விட்ட ஆசின் இப்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து காதல் காவல் படத்தில் ஹாயாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்தப் படத்தை தமிழகத்தில் வாங்கி வெளியிட விநியோகஸ்தர்களிடையே ஆதரவு இல்லையாம். அதேபோல, மேலும் 2 படங்களும் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ளது. இதையும் வாங்க ஆளில்லையாம்.

படத்தை வாங்கி அதை திரையிட்டால் நிச்சயம் பிரச்சினையை சந்திக்க நேரிடும் என்பதால் வாங்குவதிலும், திரையிடுவதிலும் தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்களிடையே பெரும் தயக்கம் காணப்படுகிறதாம்.

சல்மான் கானைப் போல ஹிருத்திக் ரோஷனும் இலங்கைக்குப் போயிருந்தார். இதையடுத்து அவர் நடித்த கைட்ஸ் படம் சென்னையை விட்டு தூக்கப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது கைட்ஸ் படத்திற்கு ஏற்பட்ட நிலைமை சல்மான் படங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X