'காண்டஹார்'-கமலுடன் இணையும் மோகன்லால்!

தமிழ்-மலையாளம் என இரு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்துக்கு தலைப்பு 'காண்டஹார்' என்றே சூட்டப்பட்டுள்ளது.
கமல்ஹாசன்-மோகன் லால் முதல் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் அரண் என்று ஒரு படம் வந்தே நினைவிருக்கிறதா... கார்கில் யுத்தத்தின் போது நடந்த ஒரு அதிரடி ஆபரேஷனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் மோகன்லால் நாயகனாக நடித்திருந்தார். அந்தப் படத்தின் அறிமுக உரைக்கு குரல் கொடுத்தவர் கமல்ஹாசன்.
அப்போதே தானும் மோகன்லாலும் ஒரு படத்தில் நடிக்கும் திட்டம் உள்ளதாகத் தெரிவித்தார் கமல்.
அதை இப்போது நிறைவேற்றும் வகையில் இந்தப் படத்துக்குக் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் கமல்.
அரண், கார்கில், மிஷன் 90 டேஸ் போன்ற போர்முனைப் படங்களை எடுத்து வரும் மேஜர் ரவி இயக்கும் படம் இது. கமல் இமேஜுக்கு ஏற்பட தமிழ் படத்துக்கு புதிய பெயர் சூட்டும் முடிவிலிருப்பதாக மேஜர் ரவி தெரிவித்தார்.
ராணுவத்தில் கமாண்டராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் மேஜர் ரவி என்பது தெரியும்தானே.
நேபாளத்திலிருந்து இந்தியாவுக்குக் கிளம்பிய விமானத்தை தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்குக் கடத்திச் சென்று, பயணிகளை பணயம் வைத்து, காஷ்மீர் சிறையில் இருந்த பயங்கர தீவிரவாதியை விடுவித்தனர். இந்தக் கடத்தல் கிட்டத்தட்ட ஒரு மாதம் நீடித்தது நினைவுகூறத்தக்கது.
வெளியுறவு அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங், தனி விமானத்தில் தீவிரவாதியை ஆப்கானுக்கு அழைத்துச் சென்று தலிபான்களிடம் ஒப்படைத்துவிட்டு, பயணிகளை மீட்டு வந்தார்.
இதன் பின்னணியில் உருவாகிறது காண்டஹார்.


Click it and Unblock the Notifications











