'கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சு!'

By Staff

Prakashraj
உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்துவிட்டதால் சண்டைக் காட்சிகளில் முன்பு போல சுறுசுறுப்பாக நடிக்க முடியவில்லையாம் பிரகாஷ் ராஜால். அதன் விளைவு, கொழுப்பை நீக்கும் லைப்போசக்ஷன் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவனையில் சேர்ந்துள்ளார்.

தமிழின் நெம்பர் ஒன் குணச்சித்திர நடிகர் பிரகாஷ் ராஜ். தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் இப்போதைக்கு அவர் மீது தடை இருந்தாலும், அவர்தான் அங்கும் நம்பர் ஒன் குணச்சித்திர நடிகர்.

சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ள பிரகாஷ் ராஜ், சமீப நாட்களாக பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டார். தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினை, திரையுலகில் கெட்ட பெயர், செக் மோசடி வழக்கு, என பல நெருக்கடிகளில் சிக்கித் தவித்ததால் உடலை பிட்னெஸாக வைத்துக் கொள்ளத் தவறிவிட்டார்.

அதன் விளைவு முன்பை விட குண்டாகத் தெரிகிறாராம். டாக்டர்களோ, உடலில் கொழுப்பு கூடிவிட்டதாகவும், அதைக் குறைத்தால் பழையபடி ட்ரிம்மாக இருக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையில் பிரகாஷ்ராஜ் சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்: அது வேற ஒண்ணுமில்ல.. கொழுப்பு கொஞ்சம் ஜாஸ்தியாடுச்சு செல்லம்... அதான். சீக்கிரமே பழைய பிரகாஷ்ராஜைப் பார்க்கலாம். இது ஒரு சாதாரண சிகிச்சை. இனி திரையுலகில், தொழில் ரீதியில் எந்தப் புகாரும் வராமல் பார்த்துக் கொள்வேன் என்றார்.

நல்லது செல்லம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X