ரஜினியின் 'The Spring'!

By Staff

Rajini
சின்ன ஹோட்டல்தான்... ஆனால் ஊருக்கே தெரிந்த ஒரு முக்கிய இடம் என்ற பெருமையைப் பெற்றது அருணாச்சலா இன். காரணம்... இது ரஜினிக்கு சொந்தமானது!

ஆரம்பத்தில் இந்த ஹோட்டலை ரஜினியே நடத்தி வந்தார். ஆனால் பாபா வெளியீட்டின்போது, ஹோட்டலின் உணவகத்தை நடத்தும் உரிமத்தை வஸந்த பவன்காரர்களுக்கு விட்டிருந்தார்.

இப்போது ஏழு ஆண்டுகள் கழித்து அந்த உணவகம், காபி ஷாப் பகுதி புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் விசேஷம்... இந்த ஹோட்டல் முழுக்க முழுக்க ரஜினிக்கு மரியாதை செய்யும் விதத்தில் டிஸைன் செய்யப்பட்டுள்ளதுதான். எந்தப் பகுதியில் பார்த்தாலும் நிச்சயம் ஏதாவது ஒரு ரஜினி ஸ்டைல் வரும் அளவு டிசைன் செய்யப்பட்டுள்ளது.

காபி ஷாப்புக்குப் போனால் அங்கே ரஜினியின் அன்றைய தோற்றங்கள் பெரிய பெரிய புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளன.

தி ஸ்பிரிங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டலை ரஜினியே குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

இயக்குநர் ஷங்கர், வைரமுத்து, காவல் துறை இணை ஆணையர் ரவி, பிரபு, ராம்குமார் என விஐபிக்கள் குவிந்துவிட்டனர்.

அனைவருமே ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டதால், கிட்டத்தட்ட இது ஒரு அறிவிக்கப்படாத ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டமாகவே தெரிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X