அமீர் கமெண்ட்-ஷாருக் ஜாலி பதில்

By Staff

Sharuk Khan
மும்பை: என்னை நம்பர் டூ என்று ஆமிர்கான் கூறியிருப்பதை, என்னைப் பாராட்டியதாகவே எடுத்துக் கொள்கிறேன் என்று ஷாருக்கான் கூறியுள்ளார்.

சாம்சங் நிறுவனத்தின் புதிய செல்போன் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீர் கானிடம் செய்தியாளர்கள், நோக்கியாவின் பிராண்ட் அம்பாசடராக ஷாருக்கான் இருக்கிறாரே என்று கேட்டபோது, சாம்சங்தான் பெஸ்ட். வழக்கம் போல ஷாருக்கான் செகன்ட் பெஸ்ட் என்று சிரித்தபடி கூறினார்.

அமீர்கானின் இந்தக் கருத்து பாலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஷாருக்கான் இதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொண்டுள்ளார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ஷாருக்கானிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதை நான் காமென்ட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. பெரிய பாராட்டாகவே கருதுகிறேன்.

அமீர்கான் எனது நண்பர். இருவரும் ஒருவரது நகைச்சுவை உணர்வை பாராட்டிக் கொள்வது வழக்கம். ஒரு வேளை சீரியஸாகவே என்னை நம்பர் டூ என்று அமீர் கூறியிருந்தாலும் கூட அதை நான் பாராட்டகவே எடுத்துக் கொள்வேன்.

இன்னொரு பிரச்சினையும் எனக்கு இருக்கிறது. எனது மனைவி அமீரின் தீவிர விசிறி. அமீரை நான் கேலி செய்து ஏதாவது பேசினால் அவ்வளவுதான்.

அமீரும், நானும் எதிர் மறையான கலைஞர்கள். அவர் புத்திசாலி, அறிவாளி. ஆனால் நான் எனக்குத் தோன்றியதைத்தான் செய்வேன். அவருடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றார் ஷாருக்.

அத்தோடு நிற்கவில்லை ஷாருக். தன்னையும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சாஜித் கானையும் கூட ஜாலியாக வாரிவிட்டார்.

ஷாருக்கான் வாங்கியுள்ள ஐபிஎல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் எனக்கு ஏன் இடம் தரவில்லை என்று சாஜித் கேட்க,

ஷாருக்கான் பதிலளிக்கையில், நிச்சயம் சாஜித்துக்கு அணியில் இடம் தர முடியாது. ஏன் எனக்கே கூட இடம் கிடையாது. காரணம், கிரிக்கெட் விளையாட்டில் திறமை மட்டும் போதாது. கெளரவத்துக்குரியவராக, நல்ல மனிதராகவும் இருக்க வேண்டும். அதையெல்லாம் சினிமாத் துறையைச் சேர்ந்த நம்மிடம் எதிர்பார்க்க முடியுமா?

எனவேதான் நமக்கு அணியில் இடம் கிடையாது. நான் 12வது வீரராக அணியில் இடம் பெற்று, தண்ணீர் பாட்டிலை கொண்டு செல்வது, டிரிங்ஸ் எடுத்துச் செல்வது போன்ற வேலையில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன். சாஜித்துக்கு அந்த வேலை கூட கிடையாது என்று கூறியபோது அரங்கில் சிரிப்பலையில் மூழ்கியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X