நானும் ஒரு மாணவன்-கமல்

சென்னை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய கலை விழா நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார் கமல அவர் பேசியதாவது:
இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கல்வி பயில வந்து இருக்கும் உங்களை சந்திக்க வாய்ப்பளித்த எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்திற்கு எனது நன்றி.
என் தந்தை என்னை உங்களைப் போல ஒரு பட்டதாரியாக்கத்தான் விரும்பினார். ஆனால் உயர்நிலைப் பள்ளியுடன் என் கல்வி நின்றுவிட்டது.
அதற்காக படிப்பதை விட்டுவிடவில்லை நான். ஒரு மாணவனாக நிறைய படிக்கிறேன்... சினிமாவில் இன்னும் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன்.
உங்களைப் போன்ற படித்த மாணவர்கள் கலைத் துறைக்கு வர வேண்டும். உங்களில் சிலர் வெறும் ரசிகர்களாக மட்டும் இருந்து விடப் போவதில்லை என்பதற்கு உதாரணம்தான் இந்த கலைத் திருவிழா.
இந்த மேடையில் வெற்றி பெறப் போகும் கலைஞர்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல. அவர்களுக்கு எனது வாழ்த்துகள் என்றார் கமலஹாசன்.
நிகழ்ச்சியில் வேந்தர் டி.ஆர். பச்சமுத்து, இணைவேந்தர் பி.ரவி, துணைவேந்தர் பி. சத்திய நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











