இயக்குநர் விஜய்காந்த்!!

தன்னுடைய கேப்டன் சினி கிரியோஷன்ஸ் சார்பில் அடுத்து தயாரிக்கவிருக்கும் 'விருதகிரி' படத்தை இயக்கப் போகிறவர் விஜய்காந்த்தான்.
இந்தப் படத்தில் மீண்டும் காக்கிச் சட்டை அணிகிறார் விஜய்காந்த். ஒரு கடமை தவறாத காவல்துறை உயர் அதிகாரி, அவரைச் சுற்றிய அரசியல் நிகழ்வுகள் என அவரது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தும் அம்சங்கள் பலவற்றைச் சேர்த்து திரைக்கதை உருவாகிறது. இதில் அவருக்கு உறுதுணயாக இயக்குநர்கள் சிலரும் களமிறங்கியுள்ளனர்.
கேப்டன் சினி கிரியோஷன்ஸூக்காக எல்கே சுதீஷ் தயாரிக்கும் இப்படத்தின் கதாநாயகி உள்பட பல தொவில் நுட்பக் கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. வேலுமணி ஒளிப்பதிவு செய்ய, ராக்கி ராஜோஷ் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். மக்கள் தொடர்பு சிங்காரவேலு.
இன்று பூஜையுடன் ஆரம்பமாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க இன்னும் சில நாட்களாகும் எனத் தெரிகிறது.
சில மாதங்களுக்கு முன் அரசாங்கம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்காந்த், விரைவில் ஒரு படத்தை இயக்க விருப்பதாகத் தெரிவித்தார். இப்போது அவர் நடித்து வரும் எங்கள் ஆசான் படம் முடிவடையும் தருவாயில் உள்ளதால் தன் சொந்த டைரக்ஷன்ல் புதுப்படத்தை அறிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











