வருமான வரி செலுத்துவதில் அக்ஷய்குமார் டாப்!

By Muthukrishnan

Akshai Kumar
வருமான வரி செலுத்துவதில் நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளார் இந்தி நடிகர் அக்ஷய் குமார்.

இந்த நிதியாண்டில் ரூ 18 கோடி செலுத்தியுள்ளார் அவர். கடந்த ஆண்டு அவர் செலுத்திய தொகை ரூ 31 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கான் வருவாய் 70 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலத்தில், இவர் செலுத்திய முன் கூட்டிய வரி ரூ.31 கோடியிலிருந்து ரூ.9.50 கோடியாக குறைந்துள்ளது.

இதனையடுத்து, கடந்த 2008-09ஆம் நிதி ஆண்டில், இரண்டாவது இடத்தில் இருந்த இவர், 2009-10ஆம் நிதி ஆண்டில் மூன்றாவது இடத்திற்குப் போய்விட்டார்.

பாலிவுட்டின் இன்னொரு முக்கிய நடிகர் அமீர்கான் செலுத்திய முன்கூட்டிய வரி ரூ.11.25 கோடியிலிருந்து ரூ.12.50 கோடியாக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து, அண்மையில் நிறைவடைந்த நிதி ஆண்டில், அதிக வருமான வரி செலுத்தியதில் இவர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

ரித்திக் ரோஷன் மற்றும் சல்மான்கான் ஆகியோர் செலுத்திய முன்கூட்டிய வரி முறையே 50 சதவீதம், 61 சதவீதம் குறைந்து ரூ.7 கோடி மற்றும் ரூ.5.50 கோடியாக குறைந்துள்ளது.

10வது இடத்தில் உள்ள அமிதாப்பச்சன் செலுத்திய முன்கூட்டிய வரி ரூ 4 கோடி. இது, முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 220 சதவீதம் அதிகம்.

ஷாகித் கபூர், ராணி முகர்ஜி, ரன்பீர் கபூர் ஆகியோர் செலுத்திய முன்கூட்டிய வரி, முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் முறையே 6.4 சதவீதம், 5 சதவீதம் மற்றும் 155 சதவீதம் உயர்ந்து ரூ.2.50 கோடி, ரூ.1.26 கோடி மற்றும் ரூ.4.60 கோடியாக அதிகரித்துள்ளது.

கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், மகேந்திரசிங் டோனி ஆகியோர் முறையே ரூ.6.80 கோடி மற்றும் ரூ.5 கோடி வருமான வரி செலுத்தி உள்ளனர்.

தமிழ் நடிகர் நடிகைகள் வரி செலுத்திய விவரங்கள் இன்னும வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X