ஆண் குழந்தைக்கு தந்தையானார் நடிகர் ஜீவா!

By Sudha

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா - சுப்ரியா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஜீவாவுக்கும், டெல்லியை சேர்ந்த சுப்ரியாவுக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சுப்ரியா, பிரசவத்துக்காக, டெல்லியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.

நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், உடனடியாக சுப்ரியாவை, டெல்லியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள்.

நள்ளிரவு 12-15 மணிக்கு, சுப்ரியாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

நடிகர் ஜீவா சென்னையில் நடந்த வந்தான் வென்றான் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தார். குழந்தை பிறந்த தகவல் கிடைத்ததும், அவர் டெல்லிக்கு சென்று மனைவியையும், குழந்தையையும் பார்த்தார்.

ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கும், நண்பர்களுக்கும் அவர் இனிப்பு வழங்கினார். மனைவியும் குழந்தையும் நலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X