சுதந்திர தினத்தில் நிதி உதவி செய்து கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்!

By Staff

Kamal celebrates Independance day with fans meaningfully
இந்தியாவின் 64வது சுதந்திர தினத்தை ரசிகர்களுடன் கொடியேற்றி வைத்துக் கொண்டாடினார் நடிகர் கமல் ஹாஸன்.

ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடுவது கமல்ஹாஸன் வழக்கம்.

இந்த ஆண்டும் இந்தியாவின் 64 சுதந்திர தினத்தை கொடியேற்றிக் கொண்டாடினார்.

இந்த நாளில் ஏழைப் பெண்களுக்கு புடவைகள், ஏழைகளுக்கு தையல் எந்திரங்கள், ஊனமுற்றோருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் என ஏராளமான உதவிகளை வழங்கினார்கள் அவரது ரசிகர்கள்.

இதற்கான நிதியை கமல்ஹாஸன் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வழங்கினார்கள்.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ரசிகர்கள் மாணவர் நாப்கின் இயந்திரத்தை வழங்கினர். கர்நாடக ரசிகர்கள் குளிர்பதனப் பெட்டியையும், பாண்டிச்சேரி ரசிகர்கள் இரு ஏழைகளுக்கு தலா ரூ 15000 உதவித் தொகையும் வழங்கினார்கள்.

வட சென்னை ரசிகர்கள் இரு மாணவர்களுக்கு தலா ரூ 10000 வழங்கினர். ராசிபுரம் ரசிகர்கள் 330 மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கினர்.

ஜாஸ்மின் என்ற மாணவியின் மேற்படிப்புக்கு ரூ 10000 வழங்கினர் திருநெல்வேலி ரசிகர்கள்.

காது கேளாதோர் பள்ளியில் தண்ணீர் தொட்டி அமைக்க புதுக்கோட்டை ரசிகர்கள் ரூ 5000 வழங்கினர். கிழக்கு காஞ்சிபுரம் ரசிகர்கள் இலவச தையல் எந்திரம் மற்றும் புடவைகள் வழங்கினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X