குழந்தைகள் அமைப்புடன் இணைந்து சுதந்திர தினம் கொண்டாடிய ஷாம்
'செஸ்' என்ற குழந்தைகளுக்கான கல்வி மற்றும் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு 'அபாக்' குடன் இணைந்து சுதந்திர தின விழாவை கொண்டாடினர். இதில் நடிகர் ஷாம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
அப்போது ஷாம் பேசுகையில், எவ்வளவோ பாடுபட்டு பெற்ற சுதந்திரம் இது, அதை தவறாக பயன்படுத்தாமல் நேர்மையான முறையில், மனிதத்தோடு வாழ்வதே உண்மையான சுதந்திரம். இந்நாளில் நாம் சுதந்திரத்தோடு வாழ உயிர்நீத்த தியாகிகளுக்கு என் வணக்கங்களை நினைவு கூறுகிறேன்.
நாம் வளரும் குழந்தைகளுக்கு உண்மையான சுதந்திரத்தை சொல்லித்தர வேண்டியது அவசியம். அதற்கு கல்வி அவசியம். அந்த கல்வியை டாக்டர். மனோரமா அவர்களைப் போன்றோர் செய்து வருகிறார்கள்.
இங்கே வந்த பிறகுதான் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்க்கும்போது நானும் என்னை இதில் இணைத்துக்கொண்டு செயல்படவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. இனி வரும் காலத்தில் என்னாலியன்றவரை உதவிகளை செய்வதோடு விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன் என்றார்.
பின்னர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் ஷாம்.


Click it and Unblock the Notifications











