விஜய்யின் வேலாயுதம்-தொடங்கியது ஷூட்டிங்

By Sudha

Vijay and Genelia
விஜய் நடிக்கும் புதிய படமான வேலாயுதம் இன்று பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்ந்திரன் பிரமாண்டமாக தயாரிக்கும் புதிய படம் வேலாயுதம். ஏற்கனவே ரவிச்சந்திரன் தயாரிப்பில் விஜய் நடித்து உருவான காதலுக்கு மரியாதை
மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. எனவே வேலாயுதம் படத்திற்கும் இப்போதே பெரும் எதிர்பார்ப்பு உருவாகி விட்டது.

ஜெயம் ராஜா இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஸ்டன் சிவா சண்டைக்
காட்சிகளை அமைக்கிறார். ப்ரியன் கேமராவைக் கையாளுகிறார்.

விஜய்க்கு ஜோடியாக ஜெனிலியா உள்பட இரு நாயகிகள்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் இன்று பட பூஜை நடந்தது.

முன்னதாக மெரீனா கடற்கரை உழைப்பாளர் சிலையிலிருந்து ரசிகர்கள் ஜோதியை ஏந்தி பேரணியாக வந்தனர். பேரணியின் முடிவில் விஜய் கையில் ஜோதியை கொடுத்தனர். விஜய்
அந்த ஜோதியை ஏந்தி மேடையில் தோன்றினார்.

பூஜைக்கு வந்திருந்த அனைத்து ரசிகர்களுக்கும் டிபன் பாக்ஸில் வைத்து பிரியாணியைக் கொடுத்தனர்.

நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், முதன் முறையாக என் ரசிகர்கள் முன்பு படத்தின் ஆரம்ப விழா நடக்கிறது. இது எனக்கு பெரிய சந்தோஷம். இப்படி ஒரு ஐடியாவை
கொடுத்தது புரடியூசர் சார்தான். அவர்தான் என்னிடம் இப்படி ஒரு ஐடியா கொடுத்தார்.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். எனக்கு உங்களை (ரசிகர்கள்) விட விஐபி வேறு யாரு இருக்காங்க.

இயக்குனர் ராஜாவுக்கு இது 5வது பிலிம். முதல் நாலு படத்துலயும் அவரது தம்பியே நடிச்சார். முதல் முறையா அவர் வெளி ஹீரோவை வச்சு டைரக்ட் பண்ணுறார். என்னையும் உங்க தம்பியா நினைச்சுக்குங்னா.

சச்சின் படத்திற்கு பிறகு இப்படத்தில் ஜெனிலியா மீண்டும் என்னுடன் நடிக்குறாங்க. அவுங்க ரொம்ப் கியூட். தமிழ், தெலுங்கு, இந்தின்னு மாறி மாறி போயிட்டு இருந்தவங்கள கூட்டிக்கிட்டு வந்துட்டோம்.

அந்நியன், தசாவதாரம் பிரம்மாண்ட படங்களுக்கு பிறகு இந்தப் படத்தையும் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறார் புரடியூசர். ஆனால் இந்தப்படத்தை தசாவதாரம் ரேஞ்சுக்கு பீல் பண்ணீடாதீங்க. நான் அவ்வளவு பெரிய ஹீரோ கிடையாது. அவர் படத்திற்கு ஜாக்கிசான், அமிதாப்பச்சன் எல்லாரும் வந்திருந்தாங்க. நான் அவ்வளவு பெரிய ஹீரோ கிடையாதுங்க என்றார் விஜய்.

விழாவில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயம் ராஜாவின் அப்பா எடிட்டர் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் வரவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X