'குருவி'க்குப் பிறகு விஜய் 'சிங்கம்'

சல்மான்கானை வைத்து போக்கிரியை இந்தியில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார் பிரபுதேவா. இப்படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் முடியும் தருவாயை ஷூட்டிங் நெருங்கி விட்டது.
இதையடுத்து விஜய்யுடன் மீண்டும் கை கோர்க்கிறார் பிரபுதேவா. இருவரும் இணையும் இப்படத்திற்கு சிங்கம் என பெயரிட்டுள்ளனர். ஏற்கனவே போக்கிரி சூப்பர் ஹிட் என்பதால், சிங்கம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
2 நாட்ளுக்கு முன்புதான் சிங்கம் என்கிற டைட்டிலை பிரபு தேவா தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்தார்.
சிங்கம் படத்தின் கதையைக் கேட்டதும் இம்ப்ரஸ் ஆகி விட்டாராம் விஜய். பிரபுதேவா இந்தி கமிட்மென்ட்டை முடித்துக் கொண்டு வந்தவுடன் ஆரம்பித்து விடலாம் எனவும் கூறினாராம்.
இதற்கிடையே தனக்கு முதன் முதலாக இயக்கும் வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு இன்னொரு படம் செய்து தர பிரபுதேவா உறுதியளித்துள்ளாராம். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும். இப்படத்தில் பிரபுதேவாவே ஹீரோவாகவும் நடிக்கவுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











