அஜீத் மகள் பெயர் அனோஷ்கா!

திருவான்மியூரில் உள்ள அவர்களது இல்லத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடந்த எளிய பெயர் சூட்டு விழாவில் இந்தப் பெயரைச் சூட்டினர்.
அனோஷ்கா என்றால் கனவுகளையும் எதிரிபார்ப்புகளையும் நிறைவேற்றுபவர் என்று அர்த்தம் என பின்னர் அஜீத் தனக்கு நெருங்கிய நண்பர்களிடம் மகளின் பெயருக்கு விளக்கம் கூறினார்.
இந்த விழாவில் அஜீத்தின் பெற்றோர், ஷாலினியின் பெற்றோர் மற்றும் நெருங்கிய சில நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்.
தன் மகளது புகைப்படம் மற்றும் அவர் குறித்த எந்த செய்தியும் பத்திரிகைகளில் இடம் பெறக் கூடாது என்பதில் அஜீத் உறுதியாக இருப்பதால், ஒரு வயது பூர்த்தியாகும் வரை யாரும் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று பத்திரிகை புகைப்படக்காரர்களைக் கேட்டுக் கொண்டாராம்.
Comments


Click it and Unblock the Notifications