பாலகிருஷ்ணாவுக்கு பிடிவாரண்ட்!

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலின் போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
கர்நூலில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்குப் பிறகும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தாராம். இதுகுறித்து எதிர்கட்சிகள் செய்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கர்னூல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகர் பாலகிருஷ்ணா ஆஜராகாததினால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
More from Filmibeat
actor balakrishna andhra court கர்னூல் தேர்தல் பிரச்சாரம் நடிகர் பாலகிருஷ்ணா பிடிவாரண்ட் விதி மீறல் election campaign karnool warrant


Click it and Unblock the Notifications











