பூஜா - நிலாவுடன் காதலா? - ஆர்யா சொல்லும் விளக்கம்!

அந்த வகையில் நடிகர் ஆர்யாவையும் பூஜாவையும் இணைத்து 'ஓரம்போ' படம் வெளியான சமயத்தில் ஏகப்பட்ட கிசு கிசுக்கள் வந்தன.
பின்னர் அவரும் நிலாவும் காதலிப்பதாகவும் கடந்த ஆண்டு வரை பேசப்பட்டது.
ஆனால் அதன் பிறகு தொடர்ந்து படங்களில் பிஸியாகிவிட்டார் ஆர்யா. மதராஸபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் என தொடர்ந்து வெற்றிப் படங்களாக அவருக்கு அமைந்துவிட்டன.
இந்த நிலையில் அவரது காதல் விவகாரம் குறித்துக் கேட்கப்பட்டது. ஆர்யா கூறுகையில், "பூஜா, நிலாவுடன் காதல் என்பதெல்லாம் தவறானவை. இதுவரை யார் மீதும் எனக்கு காதல் வரவில்லை. நயன்தாராவுக்கு நான் தனியாக பிறந்தநாள் விருந்து அளித்ததாகவும் செய்தி வந்தன. அதிலும் உண்மை இல்லை. அந்த விருந்தில் நயன்தாரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அவருடன் நான் இணைந்து நடித்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. சிறந்த காமெடி படமாக இது வந்துள்ளது. இதில் நயன்தாரா நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்ததை மறக்க முடியாது.
எனது ராசியில் காதல் திருமணம் என்று உள்ளது. அப்படி நடந்தால் மகிழ்ச்சிதான். பார்க்கலாம்.
'ஷோ பீப்பிள்' என்ற படக்கம்பெனி தொடங்கி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். புதுமுகங்களை வைத்து 'படித்துறை' என்ற படத்தை எடுக்கிறேன். நான் நடிக்கும், இயக்குனர் பாலாவின் 'அவன் இவன்' படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துள்ளது. விரைவில் வெளியாகும்.
எனக்கு இந்த வேடம்தான் என்றில்லை. எனக்கு முக்கியத்துவம் இருந்தால், வில்லனாகவும் நடிக்கத் தயார்" என்றார்.


Click it and Unblock the Notifications











