ஷனாகான் - பரத் - ரூபாலி ஜோடிகட்டும் தம்பிக்கு இந்த ஊரு!

By Staff

பரத் ஹீரோவாக நடிப்பதாக இருந்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் தயாரிப்பாளர் மாறிவிட, இப்போது தலைப்பும் மாறி விட்டது.

முதலில் இந்தப் படத்தை விஜயா வாஹினி தயாரிப்பதாக இருந்தது. அதனால்தான் தங்கள் முந்தைய தயாரிப்பான, புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடித்த எங்க வீட்டுப் பிள்ளை தலைப்பைத் தேர்வு செய்தார்கள்.

இப்போது இந்தப் படத்தைத் தயாரிப்பது விகே மீடியா எனும் புதிய நிறுவனம். இந்தப் படத்துக்கு அவர்கள் ரஜினியின் படத் தலைப்பைத் தேர்வு செய்துள்ளனர், சின்ன மாற்றத்துடன். ரஜினி நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் தம்பிக்கு எந்த ஊரு. இந்தப் படத் தலைப்பை இப்போது தனுஷ் வாங்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே பரத் படத்துக்கு தம்பிக்கு இந்த ஊரு என்று பெயர் சூட்டியுள்ளனர்.

சிம்பு ஜோடியாக 'சிலம்பாட்டம்' படத்தில் அறிமுகமான ஷனாகான். இந்தப் படத்தில் பரத் ஜோடியாக நடிக்கிறார்.

ஆறுமுகம் படத்தை தொடர்ந்து பரத் நடிக்கும் படம் இது. வீராப்பு, ஐந்தாம்படை படங்களின் இயக்குனர் பத்ரி இயக்குகிறார். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்ய, தரண் இசையமைக்கிறார். வி.கே மீடியா சார்பில் சரவணன், பாஸ்கர் தயாரிக்கின்றனர்.

ஷனாகான் தவிர, மும்பையைச் சேர்ந்த ரூபாலி என்ற இன்னொரு நாயகியும் உண்டு இந்தப் படத்தில்.

ஒரே நடிகை என்றால் கவர்ச்சி பத்தாது என்பதால் இந்த மும்பை வரவாம். நல்ல பாலிஸி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X