நள்ளிரவில் கட்சி அலுவலகம் திறந்த சிரஞ்சீவி!

By Staff

Chiranjeevi party office
சினிமா கலைஞர்கள் எந்த புதிய துறைக்குப் போனாலும் தங்கள் அடிப்படைக் குணத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறது.

பொதுவாக ஒரு படத்தின் ஸ்கிரிப்ட், படப்பிடிப்புத் தேதி அல்லது காட்சிகள் பற்றி யாரும், குறிப்பாக மீடிய தெரிந்து கொள்ளக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள் திரையுலகினர். இது ஏன், எதற்கு என்றெல்லாம் கேட்கக் கூடாத சமாச்சாரம். அப்படியே பழகிப் போய்விட்டது அவர்களுக்கும்.

இதே நடிகர்கள் அரசியலுக்கு வந்த பிறகும் தங்கள் அடுத்தடுத்த மூவ்களை ரகசியமாய் வைத்துக் கொள்ள முடியுமா... அப்படிச் செய்தால் எடுபடுமா... சினிமா என்பது மூடிய கதவுகளுக்குள் நடக்கும் நிகழ்வு என்றால் அரசியல் திறந்த வெளி அரங்கில் அரங்கேறும் சமாச்சாரமல்லவா...

ஆனால் இதிலும்கூட ரகசியம் காக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிரஞ்சீவி!

இதோ அதற்கு ஒரு லேட்டஸ்ட் உதாரணம்.

தான் விரைவில் அறிவிக்கப் போகும் புதிய கட்சியின் அலுவலகத்தை ரகசியமாக நள்ளிரவில் திறந்து சாதனை படைத்திருக்கிறார்!

கடந்த திங்கள்கிழமை இரவு 12.55-க்கு, ஒரு தொண்டருக்கும் சொல்லாமல், ரசிகர்களுக்கும் பத்திரிகைக்காரர்களுக்கும் கூடத் தெரியாமல் தன் குடும் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே வைத்துக்கொண்டு மிகமிக ரகசியமாய் இந்த தலைமை அலுவலகத்தைத் தொடங்கியுள்ளார்.

பார்ப்பதற்கு ஏதோ பிரம்மாண்டமான சினிமா செட் போல வண்ணமயமாய் தெரியும் இந்த அலுவலகம் ஐதராபாத்தின் மிக முக்கிய பகுதியான ஜூபிலி ஹில்ஸில் அமைந்துள்ளது.

திறப்பு விழாவுக்கு முன் தன் தாயாரை அமர வைத்து யாகம் செய்த சிரஞ்சீவி, பின்னர் மனைவி சுரேகாவுடன் சில சிறப்பு பூஜைகளை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண், நாகேந்திர பாபு, மகன் ராம் சரண் தேஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் எம்பி ஜோகையாவும் கலந்து கொண்டார். நாளை மறுநாள் அவர் முறைப்படி சிரஞ்சீவி கட்சியில் சேரப் போவதாக அறிவித்துள்ளார்.

இவையெல்லாம் முடிந்த பிறகு, நிகழ்ச்சிகளை ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள் (அதுவும் அடுத்தநாள் காலையில் லைவ் எனும் லோகோவோடு!!!).

தனது புதிய கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் எதையும் இன்னும் அறிவிக்காமல் ரகசியமாகவே வைத்திருக்கும் சிரஞ்சீவி, இன்று அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில், ஆந்திர மழை வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவுமாறு தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X