தேவயானி தம்பிக்கு தடை?

அனைத்திந்திய சினிமா தொழிலாளர்கள் கூட்டமைப்பின் மாநாடு சென்னையில் மூன்று நாட்கள் நடந்தது. இந்த மூன்று நாட்களும் எந்தப் படப்பிடிப்பும் நடக்கக் கூடாது, ஸ்டுடியோக்களும் இயங்கக் கூடாது என சினிமா அமைப்புகள் அனைத்தும் ஒரு சேர முடிவு செய்திருந்தன.
அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விடுமுறை விடப்பட்டது. கலந்து கொள்ளாத நடிகர் நடிகைகள் மீது கடும் நடவடிக்கை என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் காதலில் விழுந்தேன், மாசிலா மணி படங்களின் நயாகனும், தேவயானியின் தம்பியுமான நகுலன் இந்த அறிவிப்புக்கு மாறாக மாநாட்டில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டார். இதனால், அவருக்கு தடை விதிக்க ஃபெப்ஸி முடிவு செய்துள்ளது.
இதையடுத்து அவர் நடிக்கும் 'கந்தகோட்டை' படத்தில் பணிபுரிய மாட்டோம் ஃபெப்ஸி அமைப்பு அறிவித்துள்ளது.
மாசிலாமணி படம் தயாரித்த கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம்தான் கந்தகோட்டை உரிமையைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications