நான் அவனில்லை!-அலறும் விஷால்

சத்யம் படத்தின் நாயகியாக நயன்தாரா அறிவிக்கப்பட்டிருந்த நேரத்தில், 'எனக்கொரு காதலி இருக்கின்றாள்... அவரும் ஒரு நடிகைதான்...' என்று விஷால் பேட்டி அளிக்க, உடனே அது நயன்தாராதான் என செய்திகள் றெக்கை கட்டிப் பறந்தன.
ஆனால் இருவருமே செய்தியை மறுக்காமல் அமைதி காத்தனர். இப்போது சத்யம் படத்தில் லிப் டூ லிப் முத்தக் காட்சியிலும், கவர்ச்சிக் காட்சிகளிலும் இருவரும் பின்னிப் பெடலெடுத்திருப்பதைப் பார்த்த பத்திரிகைகள், அய்யோ பத்திகிச்சி ஸ்டைலில் மீண்டும் செய்திகள் வெளியிட்டு வந்தன.
அப்போதுதான் விஷாலும், நயன்தாராவும் பார்க் ஓட்டலில் பார்ட்டி கொண்டாடியதும், அங்கே சிவ பூஜை 'நாயகனாக' சிம்பு நுழைந்து கலாய்த்ததும் வெட்ட வெளிச்சமாகின.
உடனே சுதாரித்துக்கொண்ட விஷால், எனக்கும் நயன்தாராவுக்கும் எந்த ஒட்டோ உறவோ கிடையாது. அவர் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி என்று கூடத் தெரியாது. நான் அவர் காதலனுமில்லை, என பேட்டியளித்து வருகிறார்.
சமீபத்தில் சத்யம் பட பிரஸ் மீட்டில் அவர் பேசுகையில், நானும் நயன்தாராவும் காதலிப்பதாக வரும் செய்திகளில் உண்மையில்லை.
அவரும் நானும் நெருக்கமாக நடித்திருப்பது உண்மைதான். ஆனால் நயன்தாராவிடம் அனுமதி பெற்றுத்தான் முத்தக் காட்சி வைத்தோம். தொழில் வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு. நானே அதில் தெளிவாக இருக்கிறேன். நீங்களும் அதை தெளிவா எழுதுங்க பாஸ், என்றார்.
எழுதிட்டோம் பாஸ்!


Click it and Unblock the Notifications











