மலையாள டிவி நிருபரை மணக்கும் பிருத்விராஜ்
பிரபல தமிழ் - மலையாளம் நடிகர் பிருத்விராஜுக்கும் தனியார் டிவி பெண் நிருபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது.
கனாகண்டேன் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, மொழி, பாரி ஜாதம், சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, ராவணன் போன்ற படங்களில் நடித்தவர் பிருத்விராஜ். மலையாளத்திலும் முன்னணி நடிகராக உள்ளார்.
பிருதிவிராஜுடன் பல நடிகைகளை இணைத்து வந்தன. பிரியாமணியை திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்பட்டது.
தற்போது மும்பை பெண் டி.வி. நிருபரை பிருதிவி ராஜ் காதலிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. ஒரு ஆங்கில சேனலில் பணியாற்றும் அப்பெண், தென்னிந்திய சினிமா பற்றி பிருதிவி ராஜிடம் பேட்டி எடுத்தாராம். அப்போதே நிருபரிடம் மனதைப் பறிகொடுத்துவிட்டாராம் பிருத்விராஜ்.
பிருதிவிராஜ் பெற்றோரும் இந்தக் காதலை ஏற்றுக் கொண்டார்களாம். குறிப்பாக பெண்ணைப் பார்த்ததும் பிருத்விராஜின் அம்மா மல்லிகா சுகுமாரன் உடனே சம்மதம் சொல்லிவிட்டாராம்.
அம்மா அனுமதியுடன் இப்போது வாரம் தோறும் காதலியை பார்க்க மும்பை சென்று வரும் பிருத்விராஜ், ஏப்ரல் மாதம் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











