நாடகத்தில் மோகன்லால்

By Staff

Mohanlal
வெள்ளித் திரையில் மின்னிக் கொண்டிருக்கும் மோகன்லால், திடீரென நாடகத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லால், திடீரென நாடகத்திற்குத் திரும்பியுள்ளார். சாயாமுகி என்று பெயரிடப்பட்ட நாடகம் திருச்சூரில் உள்ள கன்வெஷன் மையத்தில் நடந்தது. இதில் மோகன்லால் கலந்து கொண்டு நடித்து, ரசிகர்களை மகிழ்வித்தார்.

மோகன்லால் இதற்கு முன்பும் கூட நாடகத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடித்த அவர் எந்தவித தவறும் இல்லாமல் அழகாக நடித்து ரசிகர்களின் கைத்தட்டல்களை அள்ளிச் சென்றார்.

இந்த நாடகம் மகாபாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் பீமா கேரக்டரில் மோகன்லால் நடித்தார். நடிகர் முகேஷின் காளிதாஸா விஷூவல் மேஜிக் நிறுவனம்தான் இந்த நாடகத்தைத் தயாரித்துள்ளது.

சாயாமுகி என்பது இடும்பை, பீமனுக்குக் கொடுத்த மாயக் கண்ணாடி ஆகும். அந்தப் பெயரையே நாடகத்திற்கும் டைட்டிலாக்கி விட்டனர்.

பிரசாந்த் நாராயணன் என்பவர் இந்த நாடகத்ைத இயக்கியுள்ளார். மோகன்லால், முகேஷ் உள்பட 24 முக்கிய நடிகர், நடிகைகள் இந்த நாடகத்தில் நடித்தனர்.

நாடகத்தில் நடிப்பதற்காக 60 நாட்கள் மோகன்லால் உள்ளிட்டோர் ஒத்திகை பார்த்தனராம். நாடகத்தில் 14 பாடல்களும் இடம் பெற்றன.

நம்ம ஊர் நடிகர்களும் இது போல முயற்சித்துப் பார்த்து நடிப்புத் திறமையை மெருகேற்றிக் கொள்ளலாமே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X