கர்நாடக கிராமங்கள் தத்தெடுப்பா-ரஜினி மறுப்பு

கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கடுமையான மழை வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான கிராமங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் வெள்ளத்தின் பாதிப்பு மிக அதிகம். எனவே இங்குள்ள கிராமங்களுக்கு உதவும் நோக்கில் 25 கிராமங்களை ரஜினிகாந்த் தத்தெடுக்கப் போவதாக கன்னட திரைப்படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும், கன்னட இயக்குநர் யோகராஜ் பட்டும் தெரிவித்திருந்தனர்.
ஆனால் ரஜினி தரப்பில் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரஜினியின் அலுவலகத்தில் இதுபற்றி தங்களுக்கு தகவல் எதும் இல்லை என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், இன்று ரஜினி ரசிகர் மன்றங்களின் பொறுப்பாளர் சுதாகரிடம் நமது சிறப்புச் செய்தியாளர் தொடர்பு கொண்டு இதுகுறித்துக் கேட்டார். உடனடியாக ரஜினியிடம் பேசிய சுதாகர், ரஜினி சொன்ன பதிலை நம்மிடம் தெரிவித்தார்.
ரஜினி கூறிய பதில்:
'கர்நாடக கிராமங்களைத் தத்தெடுக்கும் யோசனை எதும் இல்லை. இதுபற்றி நான் யாரிடமும் எதுவும் பேசவுமில்லை. அது தவறான தகவல்', என்றார்.


Click it and Unblock the Notifications











