கே விஸ்வநாத் படத்தில் நடிக்க ஆசை! - ரஜினி

சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து என பல சூப்பர் ஹிட் படங்களைத் தந்தவர் இயக்குநர் கே விஸ்வநாத்.
இவர் அதிகமாக கமல்ஹாஸனை வைத்து மட்டுமே படங்கள் எடுத்தார். ஆனால் ரஜினியுடன் இணையவில்லை. விஸ்வநாத் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று ரஜினியின் நீண்டநாள் விருப்பமாக இருந்துள்ளது. இதுபற்றி ரஜினி சமீபத்தில் கூறுகையில், "கே. விஸ்வநாத்தை விமான நிலையத்தில் ஒருமுறை சந்தித்தேன். அப்போது சாகரசங்கமம் அவருடைய மெகா ஹிட் படம்.
நிறைய விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவர் இயக்கும் படமொன்றில் நான் நடிக்கவேண்டும் என்று என்னிடம் கேட்டார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உடனே ஒப்புக் கொண்டேன்.
ஆனால் எனக்கு வேறு சில படங்கள் இருந்தன. அவற்றை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் விஸ்வநாத் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு அந்த படமும் எடுக்கப்படாமலேயே நின்றுவிட்டது.
விஸ்வநாத் படத்தில் நான் நடித்திருந்தால் அவர் என்னை வேறு பரிமாணத்தில் காட்டியிருப்பார். என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படமாக இருந்திருக்கும்..." என்றார் ரஜினி.ய
ரஜினி விருப்பம் பற்றி விஸ்வநாத்திடம் கேட்ட போது, ரஜினியை வைத்து படம் எடுக்க இப்போது கூட காலம் கடந்து விடவில்லை, என்றார்.


Click it and Unblock the Notifications











