ஒத்துழைத்த மீரா!-புகழும் பரத்!!

By Staff

Bharath and Meerajasmine
நேபாளி படத்தில் இடம் பெற்றுள்ள முத்தக் காட்சிகள், படுக்கை அறைக் காட்சிகளில் நடிக்க மீரா ஜாஸ்மின் நன்கு ஒத்துழைத்தார் என்று பரத், மீராவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பரத், மீரா ஜாஸ்மின் நடித்து வெளியாகியுள்ள நேபாளி படத்தில் மீரா ஜாஸ்மின் இதுவரை இல்லாத அளவுக்கு படு நெருக்கமாக பல காட்சிகளில் நடித்துள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மீரா ஜாஸ்மினுடன் நெருங்கி நடித்தது, நேபாளி படத்தில் நடித்த அனுபவம் உள்ளிட்டவற்றை பரத் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

மீரா ஜாஸ்மினுடன் நெருக்கமாக நடித்தது குறித்து அவர் கூறுகையில், மீரா ஜாஸ்மின் சிறந்த நடிகை. முதலில் அவர் படுக்கை அறைக் காட்சிகள், பாத்ரூம் காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை, தயங்கினார். ஆனால் இயக்குநர் விளக்கிச் சொன்ன பிறகு நடிக்க ஒப்புக் கொண்டார்.

மிகச் சிறப்பாக எங்களுடன் ஒத்துழைத்து அந்தக் காட்சிகளில் நடித்துக் கொடுத்தார். முழு ஈடுபாடு காட்டி அவர் நடிக்க வைத்தது பிரமிக்க வைத்தது. நிச்சயம் அவர் ஒரு அற்புதமான நடிகை.

காதல் படத்திலிருந்து எனக்கு இதுவரை ஜோடியாக நடித்தவர்கள் முக்கால்வாசிப் பேர் மலையாளி நடிகைகள்தான். இப்படித்தான் அமைய வேண்டும் என நான் யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. எனது ஜோடி யார் என்பதையும் நான் தேர்வு செய்வதில்லை. எல்லாம் இயக்குநர்களின் விருப்பம்தான்.

நான் சம்பளத்தில் குறியாக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. எனது தயாரிப்பாளர்கள்தான் எனது சம்பளத்தை நிர்ணயம் செய்கிறார்கள். சிலர் உயர்த்துகின்றனர், சிலர் குறைக்கின்றனர். எனது படம் ஏதாவது சிறப்பாக ஓடி விட்டால் என்னைக் கூட கேட்காமல் எனது சம்பளத்தைக் கூட்டி விடுகின்றனர்.

இதுவரை காதல் படங்களில் அதிகம் நடித்து வந்தேன். இப்போது ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறேன். அதுதான் ஒரு நடிகருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தித் தரும் என்றார் பரத்.

தற்போது பரத் கையில் 6 படங்கள் இருக்கிறதாம். முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு, ஆறுமுகம், திருத்தணி, சேவல் ஆகியவை அவற்றில் சில.

வருடத்திற்கு 3 படங்கள் கொடுக்க திட்டமிட்டு அதன்படி நடித்து வருகிறாராம் பரத்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X