அமெரிக்காவிலிருந்து மும்பை திரும்பினார் ஷாருக் கான்

சிகாகோவில் நடந்த இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஷாருக் கான், நியூயார்க் விமான நிலையத்தில் அமெரிக்க குடியேற்றத் துறை அதிகாரிகளால் விசாரணை என்ற பெயரில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் ஷாருக் கான் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தனது துயரம் மிகுந்த அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு ஷாருக் கான் இன்று மும்பை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை திரளான ரசிகர்கள் வரவேற்றனர்.
ப.சி. கண்டனம்:
இதற்கிடையே ஷாருக்கானை அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தனி அறையில் உட்கார வைத்து, 2 மணி நேரம் விசாரணை நடத்தியது அத்துமீறிய செயல் என்று மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரமும் கண்டனம் தெரிவி்த்துள்ளார்.
More from Filmibeat
அமெரிக்கா இந்தியா சினிமா திரும்பினார் மும்பை விசாரணை ஷாருக் கான் cinema inquiry mumbai return sharukh khan


Click it and Unblock the Notifications











