வேலைக்காரப் பெண்ணை கற்பழித்த இந்தி நடிகர் கைது!

மகேஷ் பட்டின் கேங்ஸ்டர், அய்ஷ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷைனி அஹுஜா (36). இவரது வீடு மும்பை ஓஷிவாராவில் உள்ளது. திருமணமானவர் ஷைனி.
இவர் வீட்டில் 18 வயதான ஒரு பெண் (அப் பெண்ணின் நலன் கருதி பெயர், படம் மறைக்கப்பட்டுள்ளது) வேலை செய்து வந்தார்.
நேற்று மாலை ஷைனியின் மனைவி மற்றும் உறவினர்கள் வெளியில் சென்றிருந்தனர். அப்போது வேலைக்கு வந்த பெண்ணை பலவந்தமாக கற்பழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்பெண், ஓஷிவாரா போலீஸில் தன்னை ஷைனி கெடுத்துவிட்டதாக புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நடிகர் அஹுஜாவை அழைத்து இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடத்தினர் போலீசார். கற்பழிப்பு புகார் கூறிய வேலைக்கார பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் இன்று காலை அகுஜா கைது செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து அவர் மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications











