சிபிராஜ் காதல் திருமணம்!

ஸ்டூடண்ட் நம்பர்-1 படம் மூலம் அறிமுகமானவர் சத்யராஜின் மகன் சிபிராஜ். தொடர்ந்து ஜோர், வெற்றிவேல் சக்திவேல், மண்ணின் மைந்தன், லீ உள்பட சில படங்களில் நடித்தார்.
இவருக்கும் சென்னையை சேர்ந்த வைத்தியநாதன்-உமாதேவி தம்பதிகளின் மகள் ரேவதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
பி.இ. படித்துள்ள ரேவதி சென்னையில் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் முதலியார் இனத்தைச் சேர்ந்தவர்.
ஆனால் சிபி கவுண்டர் இனத்தவர். இருவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டது. இந்தக் காதலை இரு குடும்பங்களும் ஏற்று, சிபிராஜ்-ரேவதி திருமணத்துக்கு பச்சைக் கொடி காட்டினர்.
இவர்கள் திருமணம் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சி சென்னை ராஜா அண்ணாமாலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் இன்று நடக்கிறது.
இதில் திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











