காந்தஹார் படத்திலிருந்து சூர்யா விலகல்

இந்தப் படத்தில் மோகன்லாலின் கீழ் பணியாற்றும் அதிரடிப் படை கமாண்டோ வேடத்தில் நடிப்பதாக ஒப்புக் கொண்டிருந்தாராம் சூர்யா.
ஆனால் சமீபத்தில் மோகன்லாலைச் சந்தித்த சூர்யா, தனது அடுத்தடுத்த படங்கள் மற்றும் கால்ஷீட் பற்றாக்குறை பற்றி அவரிடம் விளக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, காந்தஹார் படத்திலிருந்து விலகிக் கொண்டதை அறிவித்துள்ளதாகக் கூறுகிறார்கள்.
காந்தஹார் விமானக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இந்த காந்தஹார். தமிழில் அரண் என்ற படத்தை எடுத்த மேஜர் ரவிதான் இதன் இயக்குநர்.
படத்தின் கதை மற்றும் ஆக்ஷன் காட்சிகளை ரவி விவரித்ததைப் பார்த்து ஈர்க்கப்பட்ட சூர்யா தானாக முன்வந்து இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். இப்போது அவர் ஏன் விலகினார் என்பதற்கு சரியான காரணம் தெரியாத நிலையில், புதிய இளம் ஹீரோ ஒருவரைத் தேடி வருகிறாராம் மோகன்லால்.
சூர்யா கைவசம், சிங்கம், முருகதாஸ் படம் மற்றும் ராம்கோபால் வர்மாவின் ரக்தசரித்ரா போன்ற படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











