விஷால் தாயாரிடம் ரூ. 30 லட்சம் நகைகள் கொள்ளை

விஷாலின் தாயார் ஜானகிதேவி தெலுங்குத் திரைப்பட இயக்குனர் ஒருவரின் வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் சென்றார்.
பின்னர் துணிக்கடை ஒன்றுக்கு சென்று புடவை எடுக்கச் சென்றார். தனது கை பையை அருகே வைத்திருந்தார். அதில் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் இருந்தன. ரூ. 40 ஆயிரம் பணமும் வைத்திருந்தார்.
ஜானகிதேவி புடவைகளை தேர்வு செய்து கொண்டிருந்தபோது அருகே நின்றிருந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரது பையை எடுத்துக்கொண்டு தப்பியோடியது.
இது குறித்து அவர் சைபராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில், நான் துணிக் கடைக்கு சென்றபோது ஒரு பெண் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் என்னை பின் தொடர்ந்து வந்தது.
நான் புடவை எடுத்துக் கொண்டிருந்தபோது அவர்களும் அருகில் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் திடீரென பையை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர் என்றார்.
அந்தக் கடையில் கண்காணிப்பு கேமரா இல்லை என்பதால் கொள்ளையர்களை போலீசாரால் உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.
அந்தக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











