அமீர் படத்தில் அஜீத்

இளம் தலைமுறை ஹீரோக்கள் வரிசையில் தனக்கென தனிப்பாதையில் போய்க் கொண்டிருக்கிறார் அஜீத். முன்பு போல இல்லாமல் இப்போதெல்லாம் கதை குறித்து ரொம்பவே மெனக்கெடுகிறார்.
வெற்றி பெறக் கூடிய கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க ஆரம்
பித்து வரும் அஜீத், அடுத்து இன்னொரு சவாலான கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்.
அது, பலே பாண்டியா ரீமேக் என்கிறார்கள். சிவாஜி கணேசனின் அதிரடியான நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் பலே பாண்டியா. இப்படம் ரீமேக் ஆகவுள்ளதாம். அமீர் இயக்கவுள்ளதாக தெரிகிறது.
அஜீத் இப்படத்தின் நாயகனாக நடிக்கவுள்ளாராம். மிகவும் சவாலுக்குரிய இந்தக் கேரக்டரில் நடிக்கவிருப்பது குறித்து ஆர்வமாக இருக்கிறாராம் அஜீத்.
ஏற்கனவே பில்லா ரீமேக்கில் ஜெயித்ததால் பலே பாண்டியா ரீமேக்கிலும் நடிக்க அஜீத் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
பலே, பலே
Comments


Click it and Unblock the Notifications