அதிக வரி செலுத்தியவர்களில் முதலிடம் பிடித்த அக்ஷய் குமார்

By Staff

Akshay Kumar
இந்த ஆண்டு வருமான வரி செலுத்தியவர்களில் முதலிடம் வகிக்கிறார் முன்னணி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர் மொத்தம் ரூ.31 கோடி வரி செலுத்தியுள்ளார். அடுத்த இடத்தில் ஷாரூக்கான் உள்ளார்.

நடப்பு ஆண்டு வரி செலுத்தியவர்களில் முதல் பத்து இடங்களில் உள்ள நடிகர் நடிகைகள் பட்டியலை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி முதலிடத்தில் இருப்பவர் அக்ஷய் குமார். இவர் செலுத்தியுள்ள தொகை ரூ.31 கோடி. போன வருடம் இவர் செலுத்தியது 12.5 கோடி மட்டுமே. தொடர்ந்து இரு ஹிட் படங்கள் கொடுத்ததால் இவரது மார்க்கெட் உச்சத்துக்குப் போய்விட்டது.

அடுத்த இடத்தில் உள்ள ஷாரூக்கான் செலுத்தியுள்ள வரி ரூ.30.99 கோடி. அதாவது ரூ. 1 லட்சம் குறைவு. இவர் கடந்த ஆண்டு 31.5 கோடி செலுத்தி டாப்பில் இருந்தார்.

வழக்கம்போல இதிலும் சல்மான் கானுக்கு மூன்றாவது இடம்தான். இவர் ரூ.14 கோடி செலுத்தியுள்ளார்.

சயீப் அலிகான் ரூ.8.6 கோடி செலுத்தி 4 வது இடம் பிடித்துள்ளார்.

இந்தச வரிசெலுத்தியவர்கள் பட்டியலில் இன்றும் ஆச்சர்யமாய் திகழ்பவர் முன்னாள் சூப்பர் ஸ்டார் ராஜேஷ்கன்னா. இவர் ரூ.6.9 கோடியும் செலுத்தி 5-வது இடத்தில் உள்ளார். இவர்
கடந்த ஆண்டு ரூ.11.90 கோடி செலுத்தி 3-வது இடத்தில் இருந்தார். இந்த ஆண்டு ரூ.6.9 கோடி செலுத்தி 5வது இடம் பிடித்துள்ளார். இப்போதும் இவரது இரண்டு படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன!

நடிகை ஐஸ்வர்யாராய் 6-வது இடத்தில் உள்ளார். இவர் செலுத்தியுள்ள தொகை ரூ.4,7 கோடி. சாயீப் அலிகானின் காதலி கரீனா கபூர் ரூ.3.7 கோடி செலுத்தி 7-வது இடத்தில் உள்ளார். நடிகர் அபிஷேக்பச்சனுக்கு இதில் 8-வது இடம் கிடைத்துள்ளது.

பாடகரும் நடிகருமான ஹிமேஷ் ரேஷம்மியா ரூ.3 கோடி வரி செலுத்தி 9-வது இடத்திலும், ராஜேஷ்கன்னா கடந்த 7 ஆண்டுகளாக டாப்- 10 பட்டியலில் இருந்து வருகிறார்.

இன்றைக்கும் நிறைய படங்களில் நடித்து வரும் அமிதாப் பச்சனுக்கு இந்தப் பட்டியலில் கடைசி இடம் கிடைத்துள்ளது. அவர் செலுத்தியுள்ள தொகை ரூ. 1.25 கோடி.

கடந்த ஆண்டு டாப்-10 இந்தி நடிகர்கள் அரசுக்கு ரூ.90.90கோடி வருமான வரி செலுத்தி இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு ரூ.107 கோடி வரி செலுத்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X